திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: 32 அடி உயர விநாயகருக்கு 80 ஆயிரம் மலர்களால் பிரம்மாண்ட அலங்காரம்
திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் உள்ள 32 அடி உயர விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 80 ஆயிரம் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக தயாராக உள்ளது.