திருவாடனை: தொண்டி அருகே ஈசிஆர் சாலையில் கவிழ்ந்த லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோழியக்குடி ஈசிஆர் சாலையில், சாலையின் குறுக்கே ஆடு வந்ததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் காயமின்றி தப்பிய நிலையில், காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.