ஆத்தூர்: செம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்: 2 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Attur, Dindigul | Sep 13, 2026 தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்-தேனி, மதுரை-பழனி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். காவல் துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.