திருப்பூர் தெற்கு: திருப்பூரில் SC/ST, PCR சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஆட்சியரிடம் மனு!
திருப்பூரில் தனிப்பட்ட விரோதத்தால் SC/ST மற்றும் PCR சட்டங்களின் கீழ் தவறான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஓவை. தியாகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இந்த மனுவை வழங்கினர்.