திருப்பத்தூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம், 38 மனுக்கள் பெறப்பட்டன
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி அக்ஷய் அனில் வாகரே தலைமையில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 38 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.