நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சிறப்பு கருத்தரங்கு
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட அயலகத் திட்டமிடல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் இதனைத் தொடங்கி வைத்து, இயற்கை சார்ந்த உள்கட்டமைப்புகளின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.