திருவள்ளூர்: திருவள்ளூரில் வீடு புகுந்து நகை, 5 லட்சம் ரொக்கம் கொள்ளை: போலீஸ் தீவிர விசாரணை
திருவள்ளூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.