நாகப்பட்டினம்: நாகூரில் தொடங்கிய 470-வது கந்தூரி விழா: விறுவிறுப்பாக நடைபெறுகிறது சந்தனம் அரைக்கும் பணி
நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்காக அரசு வழங்கிய 45 கிலோ சந்தனக் கட்டைகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியுள்ளது. வரும் 19-ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 20-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறுகிறது.