ஆண்டிப்பட்டி: கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அய்யனார்புரம், பாலூத்து, கரட்டுபட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று அரை மணி நேரம் கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.