செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை அடித்து உடைத்த நபர்! பொதுமக்கள் பிடியில் சிக்கினார்
செங்கல்பட்டு படாளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் கண்ணாடிகளை குடிபோதையில் இருந்த நபர் கல்லால் அடித்து உடைத்தார். அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.