பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் - வீடியோ வைரல்!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே, மது போதையில் 4 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.