விருத்தாசலம்: தெற்கு பெரியார் நகரில் மருந்து வாங்குவது போல் நடித்து மருந்தக உரிமையாளரிடம் 5 சவரன் தாலிச் செயின் பறிப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் பட்டப்பகலில் மருந்தகத்தில் மருந்து வாங்குவது போல் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மருந்தக உரிமையாளர் வெண்ணிலா என்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றான். இது குறித்து விருத்தாசலம் போலீசார் மருந்தகத்தில் இருந்த சிசிடிவி பதிவை வைத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.