வேடசந்தூர்: வடமதுரை அருகே அதிரடி: ஆவணங்களின்றி எம்-சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உரிய ஆவணங்களின்றி எம்-சாண்ட் ஏற்றி வந்த 3 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். டிரைவர்கள் தப்பி ஓடிய நிலையில், வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.