விருத்தாசலம்: விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த விவசாயிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றாக திகழ்கிறது இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர் மேலும் நாளை மாலை முதல் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் கொண்டு வந்த நெல் மூட்டைகளை ஊழியர்கள் வெளியே எடுத்துச் செல்லக் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது