விருத்தாசலம்: விருத்தகிரிஸ்வரர் ஆலயத்தில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
விருத்தாசலத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சிவத்தலமான விருத்தகிரிஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயத்தில் உள்ள 5 கொடி மரங்களிலும் கொடியேற்றப்பட்டது. 12 நாள் நடைபெறும் மாசிமக திருவிழாவில் 6ம் நாள் திருவிழாவன்று இந்தக் கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்தல் என்ற ஐதீக திருவிழா மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவாகும். 9ம் நாள் திருவிழாவில், அதிகாலையில் ஸ்ரீ விநாயகர், முருகர் , விருதகிரீஸ்வரர் உடனுறை விருத்தாம்பிகை, பாலாம்பிகை சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகள் தேர் வீதியுலா நடைபெறும். 10ம் நாள் திருவிழா மாசி மக பெருவிழா அன்று காலையில் மணிமுத்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.