வாணியம்பாடி: ஜனதாபுரத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி ஜனதாபுரத்தில் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு செட்டியப்பனூர் கூட்டு சாலை, புதூர், கோவிந்தாபுரம் வழியாக பேருந்து நிலையம் வரை முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.