செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் பூம்புகார் விற்பனையகம் மற்றும் 5 கோடி மதிப்பிலான சந்தை வளாகம் மூடல்
மாமல்லபுரத்தில் 53 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பூம்புகார் விற்பனையகம் மற்றும் மத்திய அரசின் 5 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கைவினை சந்தை வளாகம் நிர்வாக குளறுபடியால் மூடப்பட்டன. இதனால் நிதி வீணடிக்கப்பட்டதாக கைவினை கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.