நாங்குநேரி: வள்ளியூர்: காற்றுத் துப்பாக்கியால் முயல் வேட்டையாடிய 2 பேர் கைது - சிறையில் அடைப்பு
வள்ளியூர் சூட்டுப்பொத்தை பகுதியில் காற்றுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி 4 முயல்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிடிபட்டவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.