விருத்தாசலம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சி.வெ.கணேசன் முகநூலில் பதிவு
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசன் முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார். அப்பதிவில், 'பிறரின் தோளேறி உயரம் கொள்ளாமல் துயரத்தின் மேலேறித் தொடர்ந்து ஜெயித்தவரே! மிசா எனும் பெருந்தீயில் மேன்மையுறக் குளித்தவரே! மேயரெனும் தங்கமாக மின்னிச் சிறந்தவரே! எங்கள் உயிரே உங்கள் அகவை தினத்தில் அகமகிழ்ந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்' எனப் புகழ்ந்து வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.