விருத்தாசலம்: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலக்கரையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிக்கின்ற உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விருதாச்சலம் பாலக்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.