ஆத்தூர்: சேலம்: பச்சமலையில் கனமழை; 100 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம்!
Attur, Salem | Oct 27, 2026 சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை பகுதியில் பெய்த கனமழையால் கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.