திருப்பத்தூர்: வீட்டின் மீது சாய்ந்த புளிய மரங்கள் - போக்குவரத்து பாதிப்பு!
திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் கனமழையால் வீட்டின் மீது மூன்று புளிய மரங்கள் சாய்ந்தன. யாருக்கும் காயமில்லை. நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மரங்களை அகற்றியதால், 3 மணி நேரத்திற்குப் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.