திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சட்டவிரோதமாக மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் லாரிகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.