ஆண்டிப்பட்டி: கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள அய்யனார்புரம், பாலூத்து, கரட்டுபட்டி, துரைச்சாமிபுரம் பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரம் கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.