தரங்கம்பாடி: திருக்கடையூர், கிள்ளியூர் பகுதிகளில் இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் திருக்கடையூர், கிள்ளியூர் பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதாவிற்கு ஆதரவாக திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.