இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உற்சாகமாக நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி!
அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5 மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.