பண்ருட்டி: சித்திரைச்சாவடியில் காரில் வந்த 4 பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்,காரை பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேருக்கு வலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி விசாரித்ததில் காரில் வந்த 4 பேர் பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்தபோது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினர், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.