பண்ருட்டி: விகேடி சாலை பணியை விரைந்து முடிக்க போராட்டம் அறிவித்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் பேச்சுவார்த்தை
பண்ருட்டியின் மிக பிரதான சாலையான விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சாலை பணி முழுமையடைதாதன் காரணமாக இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், புறநோயாளிகள் என பல்வேறு தரப்பினர் அவதியுற்றும், அடிக்கடி விபத்துக்களுடன், உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.