பண்ருட்டி: எலவத்தடி காளியம்மன் கோவிலில் மாசி மகத்திருவிழா - பக்தர்கள் 1,008 பால்குடம் எடுத்து ஊர்வலம்
பண்ருட்டி அடுத்த எலவத்தடியில் அமைந்துள்ள வாழவந்தான் காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக 1,008 பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி கோவில் குளக்கரையில் இருந்து 1,008 பக்தர்கள் மேள தாளங்களுடன் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர்.