பண்ருட்டி: பண்ருட்டியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வீட்டில் 15 மணிநேர சோதனையில் 15 கோடியே 64 லட்சம் மதிப்பில் 47 ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
பண்ருட்டியில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் கணவரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது 2011 16ஆம் ஆண்டில் நகர் மன்ற தலைவராக இருந்த பல்லை செல்வம் மற்றும் அப்பொழுது ஆணையாளராக இருந்த பெருமாள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான டெண்டரில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடைபெற்ற சோதனையில் 47 நிலம் மற்றும் மனை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன