துறையூர்: டி.பாதர்பேட்டையில் ரிக் வண்டி தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை - உப்பிலியபுரம் போலீசார் விசாரணை
டி.பாதர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (37), திருமணமாகாதவர். இவர் ரிக் வண்டியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனுசாமி, பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முனுசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.