துறையூர்: உப்பிலியபுரத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கோரிக்கை
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேசினார். அதில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் 50 ஆண்டுகளான பழைமையான கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. எனவே வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தர வேண்டும். மேலும் உப்பிலியபுரத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.