துறையூர்: உப்பிலிய புரத்தில் சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி அரசு பேருந்து மோதி காயமடைந்தார் சிகிச்சை பலனின்றி பலியானார்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டி ஊராட்சி முத்தையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்புசாமி வயது 65 கூலி தொழிலாளி சொந்த வேலையாக உப்பிலியபுரம் சென்றவர் சாலையை கடக்க முயன்ற போது துறையூரில் இருந்து பச்சைமலை சென்ற அரசு பேருந்து மோதி காயமடைந்தார் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்