துறையூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் 4 உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, 2022-23ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து பங்குத்தொகை வழங்குவதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் திமுகவைச் சேர்ந்த அசோகன், அதிமுகவைச் சேர்ந்த இந்துமதி, சின்னம்மா, தேமுதிகவைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய நால்வரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.