திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் - இந்து முன்னணியினர் 40 பேர் கைது
திண்டுக்கல் குடைபாறைபட்டியில் காவல் துறை தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர். சிலை பறிமுதல் செய்யப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. அப்பகுதியில் தற்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.