ஆண்டிப்பட்டி: தேனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களின் இரவு நேரப் போராட்டம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.