நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர் 20-ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, நவம்பர் 20 வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக டிசம்பர் 5 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.