செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சாலை ஓரம் குப்பை எரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், சாலை ஓரங்களில் குப்பைகளை எரிப்பதாகவும், நீர்நிலைகளில் கொட்டுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.