
அதிராம்பட்டினம் நகராட்சியில் UPI வசதி இல்லையா?
வரிகளை செலுத்த மக்கள் படாதபாடு – டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
அதிராம்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை UPI மற்றும் பிற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் மூலம் செலுத்துவதற்கான வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் UPI உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில், நகராட்சி வரிகளை செலுத்துவதற்கு நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நேரம் மற்றும் அலைச்சலுக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் கட்டண வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில், நகராட்சியில் UPI வசதி ஏற்படுத்தப்படாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிராம்பட்டினம் நகராட்சியில் விரைவாக UPI மற்றும் பிற டிஜிட்டல் கட்டண வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.