Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana

இந்தியாவின் விளையாட்டுத் திறனைப் பறைசாற்றும் பதக்கங்கள்! #Cheer4Bharat #NewIndia #CWG2026

Tamil Nadu, India | Jul 28, 2026

MORE NEWS

விழுப்புரம் நாயக்கன் தோப்பில் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு!

மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு தெருவில் ஆறாகப் பாயும் பாதாள சாக்கடை கழிவுநீர். 40 குடும்பங்கள் சந்திக்கும் சொல்லொணாத் துயரம்!

📹 முழு வீடியோ செய்தி கீழே 👇

#VillupuramNews #News32 #Viluppuram #PublicIssue #CivicIssues #GroundReport

விழுப்புரம் நாயக்கன் தோப்பில் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு! மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு தெருவில் ஆறாகப் பாயும் பாதாள சாக்கடை கழிவுநீர். 40 குடும்பங்கள் சந்திக்கும் சொல்லொணாத் துயரம்! 📹 முழு வீடியோ செய்தி கீழே 👇 #VillupuramNews #News32 #Viluppuram #PublicIssue #CivicIssues #GroundReport

Viluppuram, Viluppuram | Aug 2, 2026

விரைவில் அரசியல் கட்சியாக மாறுகிறது ‘வீ த லீடர்ஸ்’! 4 வாரத்தில் அண்ணாமலை அறிவிப்பு.

போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரியில் உடனடியாக நீரைத் திறக்கக் கோரியும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் 4 முனை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,

#Viluppuram #WeTheLeaders #Annamalai #SayNoToDrugs #SaveTamilNaduFarmers #CauveryIssue #TamilNaduPolitics #AwarenessRally #ViluppuramNews

விரைவில் அரசியல் கட்சியாக மாறுகிறது ‘வீ த லீடர்ஸ்’! 4 வாரத்தில் அண்ணாமலை அறிவிப்பு. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரியில் உடனடியாக நீரைத் திறக்கக் கோரியும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் 4 முனை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார், #Viluppuram #WeTheLeaders #Annamalai #SayNoToDrugs #SaveTamilNaduFarmers #CauveryIssue #TamilNaduPolitics #AwarenessRally #ViluppuramNews

Viluppuram, Viluppuram | Aug 2, 2026

அழிந்து வரும் நாட்டு விதைகளுக்கு புத்துயிர்... விழுப்புரத்தில் களைகட்டிய 'மண்ணின் மணம்' வீசும் திருவிழா! 

பசுமை இயற்கை விவசாய இயக்கம் (தமிழ்நாடு & புதுச்சேரி) சார்பில், அமைப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் பிரம்மாண்ட பாரம்பரிய விதை மற்றும் உணவுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது! 

100+ பாரம்பரிய நெல் & நாட்டு விதைகள்: நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை நாட்டு ரக விதைகள் மற்றும் இயற்கை விவசாய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அரிய அரிசி ரகங்கள்: கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தக்கார், மூங்கில் அரிசி, குழியடிச்சான், கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை போன்ற பல பாரம்பரிய அரிசி வகைகள் ஒரே இடத்தில்!

பாரம்பரிய உணவு திருவிழா: இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நேரடி விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

இயற்கை விவசாய ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களையும் விதைகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்! 

#Viluppuram #ViluppuramNews #TraditionalSeeds #OrganicFarming #TraditionalRice #MapillaiSamba #KaruppuKavuni #NatureLovers #TN32News #ViluppuramEvents

அழிந்து வரும் நாட்டு விதைகளுக்கு புத்துயிர்... விழுப்புரத்தில் களைகட்டிய 'மண்ணின் மணம்' வீசும் திருவிழா! பசுமை இயற்கை விவசாய இயக்கம் (தமிழ்நாடு & புதுச்சேரி) சார்பில், அமைப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் பிரம்மாண்ட பாரம்பரிய விதை மற்றும் உணவுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது! 100+ பாரம்பரிய நெல் & நாட்டு விதைகள்: நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை நாட்டு ரக விதைகள் மற்றும் இயற்கை விவசாய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அரிய அரிசி ரகங்கள்: கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தக்கார், மூங்கில் அரிசி, குழியடிச்சான், கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை போன்ற பல பாரம்பரிய அரிசி வகைகள் ஒரே இடத்தில்! பாரம்பரிய உணவு திருவிழா: இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நேரடி விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இயற்கை விவசாய ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களையும் விதைகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்! #Viluppuram #ViluppuramNews #TraditionalSeeds #OrganicFarming #TraditionalRice #MapillaiSamba #KaruppuKavuni #NatureLovers #TN32News #ViluppuramEvents

Viluppuram, Viluppuram | Aug 2, 2026

திண்டிவனத்தில் கத்திமுனை வழிப்பறி! VAO மற்றும் மாணவனைத் தாக்கிய 5 பேர் கொண்ட 'ஜாலி' கும்பல் கைது

கிராம நிர்வாக அலுவலரை கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்லூரி மாணவரைத் தாக்கி பைக்கைப் பறித்தும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை மயிலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! 

 கல்லூரி மாணவர் ஹரிவரதனைத் தாக்கி அவரது பல்சர் பைக்கைப் பறித்துச் சென்ற கும்பல்.
 கொல்லியங்குணம் VAO அருள்ராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி 8 கிராம் தங்கச் சங்கிலி & செல்போன் பறிப்பு!
செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, திருடப்பட்ட பைக்கை வைத்திருந்த நபரைப் பிடித்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து கூட்டேரிப்பட்டு பகுதியில் சுற்றி வளைத்து 5 பேரையும் தூக்கியது தனிப்படை! 😎📱

 கைது செய்யப்பட்டவர்கள்:
காட்வின் (21) - செய்யூர்
ஹேமந்த் குமார் (19) - சேவூர்
ராகேஷ் (22) - மதுராந்தகம்
தனுஷ் குமார் (22) - செய்யூர்
கோகுல் (19) - சிலாவட்டம்

 ₹28,500 ரொக்கம், 8 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன்!

 வழிப்பறி செய்த பணத்தைக் கொண்டு பல்வேறு ஊர்களில் ரூம் போட்டு ஜாலியாக தங்கி வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

நேர்த்தியாகச் செயல்பட்டு கொள்ளைக் கும்பலைப் பிடித்த மயிலம் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி மதிவாணன் அவர்கள் பாராட்டியுள்ளார்! 

#ViluppuramNews #Tindivanam #MailamPolice #CrimeNews #PoliceAction #ViluppuramDistrict #BreakingNews #TamilNaduPolice

திண்டிவனத்தில் கத்திமுனை வழிப்பறி! VAO மற்றும் மாணவனைத் தாக்கிய 5 பேர் கொண்ட 'ஜாலி' கும்பல் கைது கிராம நிர்வாக அலுவலரை கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்லூரி மாணவரைத் தாக்கி பைக்கைப் பறித்தும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை மயிலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! கல்லூரி மாணவர் ஹரிவரதனைத் தாக்கி அவரது பல்சர் பைக்கைப் பறித்துச் சென்ற கும்பல். கொல்லியங்குணம் VAO அருள்ராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி 8 கிராம் தங்கச் சங்கிலி & செல்போன் பறிப்பு! செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, திருடப்பட்ட பைக்கை வைத்திருந்த நபரைப் பிடித்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து கூட்டேரிப்பட்டு பகுதியில் சுற்றி வளைத்து 5 பேரையும் தூக்கியது தனிப்படை! 😎📱 கைது செய்யப்பட்டவர்கள்: காட்வின் (21) - செய்யூர் ஹேமந்த் குமார் (19) - சேவூர் ராகேஷ் (22) - மதுராந்தகம் தனுஷ் குமார் (22) - செய்யூர் கோகுல் (19) - சிலாவட்டம் ₹28,500 ரொக்கம், 8 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன்! வழிப்பறி செய்த பணத்தைக் கொண்டு பல்வேறு ஊர்களில் ரூம் போட்டு ஜாலியாக தங்கி வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது. நேர்த்தியாகச் செயல்பட்டு கொள்ளைக் கும்பலைப் பிடித்த மயிலம் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி மதிவாணன் அவர்கள் பாராட்டியுள்ளார்! #ViluppuramNews #Tindivanam #MailamPolice #CrimeNews #PoliceAction #ViluppuramDistrict #BreakingNews #TamilNaduPolice

Viluppuram, Viluppuram | Aug 2, 2026

சோதனைச் சாவடியில் பரபரப்பு! - கெங்கராம்பாளையம் எல்லை அருகே கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!

விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே மதுபோதையில் வாகனங்களை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காணை அருகேயுள்ள கருங்காலிபட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், புதுச்சேரி மதகடிப்பட்டில் மது அருந்திவிட்டு பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் கெங்கராம்பாளையம் எல்லை அருகே நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய், சாலையில் வந்த பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவ்வழியாக வந்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#VillupuramNews #PoliceArrest #TrafficDisruption #Villupuram #Valavanur #BreakingNews #TN32News

சோதனைச் சாவடியில் பரபரப்பு! - கெங்கராம்பாளையம் எல்லை அருகே கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது! விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே மதுபோதையில் வாகனங்களை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காணை அருகேயுள்ள கருங்காலிபட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், புதுச்சேரி மதகடிப்பட்டில் மது அருந்திவிட்டு பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் கெங்கராம்பாளையம் எல்லை அருகே நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய், சாலையில் வந்த பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவ்வழியாக வந்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #VillupuramNews #PoliceArrest #TrafficDisruption #Villupuram #Valavanur #BreakingNews #TN32News

Viluppuram, Viluppuram | Jul 30, 2026