பெரியகுளம்: 3-வது நாளாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 3-வது நாளாக நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 160 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், சுற்றுவட்டார குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.