கோவை வடக்கு: கோவை பெண் யூடியூபருக்கு மிரட்டல்: 16 வழக்குகளில் சிக்கிய யூடியூபர் மணிகண்டன் கைது!
கோவை பெண் தொழில்முனைவோரின் வீடியோக்களைத் திருடி, ஆபாச அவதூறு பரப்பிய திருச்செந்தூரைச் சேர்ந்த யூடியூபர் மணிகண்டனை சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.