சேலம்: கன்னியாகுமரி - பூனே ரெயிலில் மீட்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை
Salem, Salem | Oct 23, 2026 கன்னியாகுமரியில் இருந்து பூனே செல்லும் ரெயிலில், யாரும் இன்றி தனியாக இருந்த ஒரு மாத பெண் குழந்தையை ரெயில்வே போலீசார் மீட்டு, குழந்தைகள் உதவி மையத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்கள் விசாரணைக்கு பின் தெரியவரும்.