தென்காசி: கடையத்தில் அதிரடி மாற்றம்: தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்!
நெடுஞ்சாலைத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடையம் பகுதியில் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவை ஓரிரு நாட்களில் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.