பண்ருட்டி: அங்குசெட்டிப்பாளையத்தில் முதலுதவி சிகிச்சை செய்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் மீது சரமாரியாக தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்.
பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் சாலையில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்ற இரு இளைஞர்கள் சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இது குறித்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த போது மது போதையில் இருந்த இரு இளைஞர்கள் இருவரையும் தாக்கியதால் பரபரப்பு..போலீசார் வழக்குப்பதிவு