பண்ருட்டி: 100% வாக்களிப்பை வலியுறுத்தி நான்கு முனை சந்திப்பில் ராட்சத பலூனை பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு பண்ருட்டி நான்குவழி சாலை சந்திப்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அருண் தம்புராஜ் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.