பண்ருட்டி: பாலூர்,எழுமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் அமைச்சர் வேட்பாளர் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார்.இவர் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கொளுத்து வெயிலில் திறந்த வேனில் சென்று தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் சி.வெ. கணேசன், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்,துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் எழுமேடு,பாலூர்,சித்தரசூர்,நத்தம்,அருங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்