பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே தேமுதிக பரப்புரை"கேப்டனை நினைத்து கண் கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்..
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், மக்களுக்காக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,ஆட்சி பலமும் பணபலமும் கொண்டு மச்சானும்,பச்சானும் வந்தாலும் இங்கு அவர்கள் பாச்சா பலிக்காது என பிரேமலதா தெரிவித்தார்.