நத்தம்: நத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு மாடு: சிசிடிவி காட்சி வைரல்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தக்கடை பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் காட்டு மாடு உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.