ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு - சோக சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விஷப்பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார். சின்னகாரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண், தோட்டத்திற்குச் சென்றபோது விஷப்பூச்சி கடித்ததில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.